உணவில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஸ்ப்ரிங் ஆனியன்ஸ் என அழைக்கப்படும் வெங்காயத்தாள் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது. வெங்காயம் போலவே வெங்காயத் தாளிலும் கந்தகச்சத்து அதிகமாக இருக்கிறது. வெங்காயத்தாள் வெள்ளை,மஞ்சள் மற்றும் சிவப்பு உட்பட பல்வேறு வகைகளில் கிடைக்க கூடியது. இது குறைந்த கலோரியை கொண்டது.
வெங்காயத்தாளில் வைட்டமீன் சி, வைட்டமீன் பி2, வைட்டமின் ஏ,கே மற்றும் தயமின் என பல வைட்டமின்கள் நிறைந்துள்ளன இதுமட்டுமின்றி மக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ்,காப்பர்,மாங்கனீஸ் நார்ச்சத்துகள் மூலங்களாக உள்ளன.