கட்டை விரல்: உங்கள் கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால், மன அழுத்தம் குறைய, மனநிலையை கட்டுப்படுத்த முடியும், நல்ல உறக்கம் பெறலாம். மேலும் இது உடற்சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.
சிறுவிரல்: சிறுவிரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது இதயம் மற்றும் இரத்த ஓட்டத்திற்கு நல்லது. இது இரத்த ஓட்டத்தை சீராக்கி இதர உடல் பாகங்களின் செயற்திறனை ஊக்குவிக்கிறது. மேலும் இது மூளையின் செயல்திறனையும் மேம்படுத்துகிறது, இதனால் உங்கள் எண்ணம், சிந்தனை, கவனம் போன்றவையும் மேம்படும்.
உள்ளங்கை: மன அழுத்தம் தான் அனைவருக்கும் ஏற்படும் கொடிய நோய். இது ஒட்டுமொத்தமாக மனதையும், உடலையும் பாதிக்கக் கூடியது. உள்ளங்கையில் அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வது நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க உதவுகிறது.