ஆயுர்வேதத்தில் ஹிங்குவசாதி என்னும் சூரண மருந்தில் இந்து உப்பானது சேர்க்கப்படுகிறது. இந்த மருந்தினால் இதய நோய்கள், மூட்டு வலி, இடுப்பு வலி, நீங்குகிறது. பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலி, ஆசனவாய் வலி போன்றவற்றையும் இது நீக்குகிறது.
நெஞ்சு பிடிப்பு, சோகை, மூலம், விக்கல், மூச்சிரைப்பு, இருமல் இவற்றைக் குணப்படுத்தும் தன்மையும் இந்து உப்பிற்கு உள்ளது. 2. கந்தர்வஹஸ்தாதி எனும் கசாயத்தில் இந்து உப்பும், வெல்லமும் ஒரு சிட்டிகை சேர்த்து குடிப்பதால் நாக்கில் ருசி இல்லாமல் போகும் தன்மையும், குடல் வாய்வு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் தீர்க்கப்படுகிறது.