தூதுவளையை மைபோல் அரைத்து சின்ன வெங்காயம் சேர்த்து அடைபோல் செய்து சாப்பிட்டு வர தலையில் உள்ள கபம் குறையும். காது மந்தம், இருமல், நமைச்சல், பெரு வயிறு மந்தம் போன்றவைகளுக்கு தூதுவளை ஓரு அரு மருந்தாகும்.
தூதுவளை பழத்தை நிழலில் காயவைத்து பொடியாக்கி, தேன் கலந்து சாப்பிட்டால் மார்பு சளி, இருமல் நீங்கும். பாம்பின் விஷம் முறியும்.
தூதுவளை கீரை அடிக்கடி சமைத்து உண்டு வர புற்றுநோய் ஏற்படாது. தொண்டை புற்று, கருப்பை புற்று, வாய்ப் புற்று ஆகியவைகளுக்கு தூதுவளை ஓரு அருமருந்தாகும்.