தூதுவளையை உணவில் தேவையான அளவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், உடல் வலுவடைந்து நரம்பு சம்பந்த பிரச்சனை நீங்கும். மேலும் உடல் இயற்கையாகவே எதிர்ப்புச் சக்தியைப் பெற்றுவிடும். அதனால் பல்வேறு தொற்று வியாதிகள் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
தூதுவளை கொண்டு ரசம் தயாரித்து, நோய் தாக்கம் ஏற்பட்டவர் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சளி, இருமல், மூக்கடைப்பு, மூச்சிரைப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகளிலிருந்து எளிதாகக் குணம் அடைய முடியும்.