சர்க்கரை உடலுக்கு எந்த சத்தையும் கொடுக்காமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், உடம்பிலுள்ள சத்தையும் ஈர்த்துக் கொள்கிறது. அதனால்தான் இது சத்திலாத கலோரி, சத்தில்லாத உணவு என்றும் அழைக்கப்படுகிறது.
டின் பானங்கள் செயற்கை சத்துணவு முதலியவைகளில் சர்க்கரை அதிகம் சேர்க்கப்படுகிறது. உங்கள் குழந்தைக்கு குளிர்பானம், ஐஸ்கீரீம், சாக்லேட் மற்றும் அளவுக்கு அதிகமான சர்க்கரை உள்ள உணவுகளைக் கொடுப்பதன் மூலம் உங்கள் குழந்தையை நீங்களே நோயாளியாக மாற்றுகிறீர்கள்.
ரத்தத்திலுள்ள அதிகப்படியான சர்க்கரை ரத்தக்குழாய் சுவர்களைத் தடிக்கச் செய்யும். இதயத்துக்கு அதிக அழுத்தம் உண்டாகும். அதனால் மாரடைப்பு, பக்கவாதம் ஆகியன வரும். அளவுக்கு அதிகமாக சுக்ரோஸ் உள்ள உணவு எலும்பில் கால்சியத்தைக் குறைத்து எலும்பு முறிவு உண்டாக்குகிறது.