பேன் தொல்லையை போக்க உதவும் சில இயற்கை முறையிலான குறிப்புகள் !!

திங்கள், 26 செப்டம்பர் 2022 (15:01 IST)
முடி வளர்ச்சி அதிகம் உள்ளவர்களுக்கும் கூந்தலை சரியாக பராமரிக்காதவர்களுக்கும் பேன் அதிகம் வரும் வாய்ப்புகள் உள்ளது. தலைமுடியில் ஈரம், பிசுபிசுப்பு, அழுக்கு போன்றவை இருந்தால் பேன் தொல்லை கண்டிப்பாக வரும்.


ஒருவர் பயன்படுத்திய டவல், சீப்பு, ஹேர் பிரஷ் போன்றவற்றை எடுத்துப் பயன்படுத்தினாலும் அதன் வழியாக நமது முடிகளுக்குள் பேன் நுழைந்து கொள்ளும். மேலும் ஒரே தலையணையில் அருகருகே தலை வைத்துப் படுப்பது போன்ற காரணங்களால் பேன் தொல்லை ஆரம்பிக்கிறது.

இரண்டு தேக்கரண்டி வெந்தயத்தை ஊற வைத்து அரை கப் தேங்காய்ப்பால் சேர்த்து நன்கு மையாக அரைத்து அதனுடன் மூன்று தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து தலைக்குத் தேய்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து அதன் பின்பு குளித்து வந்தால் விரைவில் பேன் மற்றும் பொடுகு தொல்லை நீங்கும்.

வெங்காயச் சாறு, எலுமிச்சைச் சாறு இரண்டையும் சம அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை பஞ்சில் நனைத்து ஸ்கால்ப்பில் படுமாறு தடவி பாத் கேப் மூலம் கவர் செய்ய வேண்டும். பிறகு முடியினை அலசும்போது பேன் தானாக வெளியேறிவிடும்.

வேப்ப எண்ணெய்யுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தடவ வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து குளிக்கவும். இவ்வாறு தொடர்ந்து 3 வாரங்களுக்கு தேய்த்து குளித்து வந்தால் பேன் தொல்லை மற்றும் நீண்ட நாட்களாக இருந்து வந்த ஈறு, பொடுகு ஆகியவை நீங்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்