கொய்யாப்பழம், ஸ்ட்ராபெரி பழத்தை சாப்பிடுவதால் பற்களில் உள்ள கறைகள் நீங்கும். கொய்யா இலையை நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை கொப்பளித்து வந்தால் பற்களில் உள்ள கறைகள் நீங்கிவிடும். கிராம்பு பொடியுடன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து மிதமான சுடுநீரில் கலந்து வாய் கொப்பளித்தால் பற்களில் உள்ள கறைகள் நீங்கும்.
இரவு சாப்பாடு முடித்து படுக்கச் செல்வதற்கு முன்பு ஆரஞ்சு பழத்தோலைக் கொண்டு பற்களை நன்றாக தேய்க்க வேண்டும். இதனை தேய்த்தபிறகு வேறு எதையும் சாப்பிடவோ, குடிக்கவோ கூடாது. மறுநாள் காலை எழுந்து வாயை கொப்பளிக்கலாம். இரவு முழுவதும் பற்களில் படர்ந்திருப்பதால் ஆரஞ்சு பழத்தோல் கறையை போக்குவதுடன் கிருமிகளையும் அழித்துவிடும்.
ஸ்ட்ராபெர்ரி பழத்தில் இரண்டு எடுத்து நன்றாக அரைத்து, தினமும் காலையில் பல் தேய்த்தவுடன், சிறிதளவு எடுத்து லேசாக பற்களில் தேய்த்து வாய் கொப்பளிக்க வேண்டும். இவ்வாறு 10 நாட்களுக்கு செய்து வர, பற்களில் உள்ள கறைகள் நீங்கும்.
வெள்ளை எள்ளு விதையை, நன்றாக பொடி செய்து பற்களின் மேல் தேய்த்து வந்தால், பற்களின் மேல் உள்ள கறைகள் நீங்கிவிடும். பேக்கிங் சோடா, கல் உப்பு இரண்டையும் ஒன்றாக கலந்து பற்களின் மீது தேய்த்து வந்தால் பற்களில் உள்ள கறைகள் நீங்கும்.