உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் சில இயற்கை மருத்துவ குறிப்புக்கள் !!

செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (15:49 IST)
தலைவலி, மூக்கு நீர் ஒழுகுதல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகிய வியாதிகளுக்கு குங்குமப் பூ அரிய மருந்தாகும்.


குங்குமப் பூவை 1 பங்கு எடுத்து, அதை 80 பங்கு தண்­ணீரில் ஊற வைத்து வடிகட்டி, அதில் 30 மிலி அளவு காலை, மாலை இருவேளை அருந்தி வர தலைவலி, மூக்கு நீர் ஒழுகுதுல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகியவை நீங்கும்.

குங்குமப் பூவுடன் தேன் கலந்து தினமும் இருவேளை உட்கொண்டு வர ஆஸ்துமா முதலிய சுவாச நோய்களை போக்கி சுவாசத்தை எளிதாக்கும். அம்மை நோய் கண்டவுடன் துளசி இலைகளையும், குங்குமப்பூவையும் சேர்த்து அரைத்து உட்கொள்ள அம்மை நோய் குணமாகும்.

கரிசலாங்கண்ணி கரிசாலை, அரிப்பான் பொற்கொடி போன்ற பெயர்களால் வழங்கப்படுகிறது. கரிசலாங்கண்ணிக் கீரையில் தங்கச் சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ‘ஏ’ அதிகம் உள்ளன. கரிசலாங்கண்ணியை எளிய முறையில் உபயோகித்தாலே பல நன்மைகளை அடையலாம். வாரத்துக்கு இரண்டு நாள், இந்த கீரையைச் சமையல் செய்து சாப்பிட்டாலும் இதன் சாற்றை 100 மில்லியளவு சாப்பிட்டு வந்தாலும், உடலுக்கு எந்த நோயும் வராமல் நோய் எதிர்ப்புத் தன்மை உண்டாகும்.

முதுமை தோற்றத்தைக் கட்டுப்படுத்தும். கண்பார்வை கூர்மையடையும். பல் நோய்கள் வராமல் தடுக்கும். கீரையுடன் பருப்பு மட்டும் சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும். இதை இரவு வேளைகளில் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. பல கொடிய வியாதிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். மஞ்சள் காமாலை முதல் அனைத்து வகையான காமாலை நோய்களுக்கும் மிக முக்கியமானது கரிசலாங்கண்ணிக் கீரையாகும்.

மோரில் வெந்தயத்தை போட்டு 10 நிமிடம் விட்டு சாப்பிட்டு வந்தால் உடற்சூடு தணிந்து விடும். ஒவ்வொரு நாளும் ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை தூளாக்கியோ அல்லது அப்படியே சாப்பிட்டு வந்தால் உடலிலுள்ள சர்க்கரையினளவு கட்டுப்படுத்தப்படும்.

பாலூட்டும் தாய்மாருக்கு பால் நன்றாக சுரக்க வறுத்த வெந்தயத்தை இடித்துக் கொடுக்கலாம். அதுமட்டுமல்லாமல் வயிற்றுப் போக்கு இருப்பின் அதற்கும் வெந்தயம் சிறந்த மருந்து. பெண்களுக்கு மாதவிடாயின் போது வெந்தயம் கொடுத்தால் நன்மை பயக்கும். மேலும் தலைக்கு வைக்கும் எண்ணெய்க்குள் வெந்தயத்தை போட்டுவைத்துக் கொண்டால் அது நல்ல குளிர்ச்சியைத் தரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்