தாளிக்கீரை என்பது வேலிகள், சிறு காடுகள் ஆகிய பகுதிகளில் காணப்படும் கொடியின் இனம். இந்த கீரை அனைத்து இடங்களிலும் தானாக வளர்ந்து, யாரும் பயன்படுத்தாமல் வீணாகும் மூலிகை வகைகளில் இதும் ஒன்று.
ஆண்மையை அதிகரிக்க இந்த 5 வகையான கீரை வகைகள் பயன்படுகிறது. நறுந்தாளி, நன்முருங்கை, தூதுவளை, பசலை, வாளிளறு கீரை நெய்வார்த்துண்ணில் யாழி என விஞ்சுவார் போகத்தில் பெண்களெல்லாம் பின்வாங்கி கேள். இதில், நறுந்தாளி என்பது தாளிகீரையை குறிக்கும்.
அடுத்துள்ள தூதுவளை, பசலைக்கீரை, அரைக்கீரை ஆகிய 5 வகையான கீரைகளை பசு நெய் ஊற்றி சமைத்து உண்டு வர யாழி என்ற விலங்கின் பலம் உடலுக்கு கிடைக்கும் என்று சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதில், இலை மட்டும் அதிக மருத்துவ குணம் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உள் உறுப்புகளில் ஏற்படும் புண், அழற்சி, வாய்ப்புண், சிறுநீர்ப் பாதையில் தோன்றும் நோய்கள், விந்தணு குறைபாடு போன்றவை இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விடும்.