பற்பாடகம் செடி முழுவதுமே மருத்துவ குணமுடையதா...?

செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (11:15 IST)
பற்பாடகம் மென்மையான பல கிளைகளை உடைய சிறு செடியினம். தண்ணீரில் நனைத்து கசக்கினால் வழுவழுப்பாக சாறு வரும். இதன் முக்கிய குணம் உடல் வெப்பத்தை தணிக்கும், காய்ச்சலை குணமாகும். இதன் செடி முழுவதுமே மருத்துவ குணமுடையது.


பற்பாடகம் மூலிகையை டீ நீராக காய்ச்சி குடித்தால் சளியினால் ஏற்பட்ட சுரம், தீராத தாகம, பித்தகாசநோய் பித்ததோஷம் ஆகியவை குணமாகும். இதை தலையில் தேய்த்து குளித்தால் கண்களுக்கு குளிச்சி தரும்.

பற்பாடகம் இலையைப் பாலில் அரைத்து தலையில் தடவி குளித்து வரக் கண்ணொளி மிகும். உடல் நாற்றம், சூடு தணியும்.

எவ்வகைக் கய்ச்சலாயினும் கைப்பிடி அளவு பற்பாடகம் எடுத்து தேக்கரண்டியளவு மிளகு, சுக்கு, அதிமதுரம், வேப்பங்கொழுந்து இடித்துப் போட்டு தண்ணீர்விட்டு சுண்டக்காய்ச்சி அதை காலை, மாலை கொடுத்துவரக் குணமாகும். இவ்விதம் மூன்றுநாள் கொடுக்க வேண்டும்.

கண்டங்கத்திரி இலை, ஆடாதொடை, விஷ்ணுகாந்தி, பற்பாடகம் , சீரகம், சுக்கு ஆகியவைகளை சேர்த்து காய்ச்சி குடித்தால் தலையில் ஏற்படும் நீர் ஏற்றம் குறையும்.

வியர்வை பெருக்கியாகவும், உடல் நாற்றத்தையும், அழுக்கையும் போக்கும். மலத்தை இளக்கும். இதை தனித்தே பயன்படுத்துவது வழக்கத்தில் உள்ளது. இந்த மூலிகை மற்ற மூலிகையோடு சேரும்போது அதன் தன்மை குணங்களுக்கு ஏற்றவாறு பணிபுரிகின்றது. நோய்களை வேருடன் களையும் தன்மை உடையது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்