துத்தி இலையையும் துத்திப் பூவையும் சம அளவில் எடுத்து, மை போல் அரைத்து மூலப் பருக்களின் மேல் போட்டால் பருக்கள் மறையும். பருக்களினால் ஏற்பட்ட வீக்கம், வலிநீங்கி பருக்கள் மறைந்து விடும்.
துத்தி இலை அல்லது துத்தி வேரை 35 கிராம் எடுத்து 250 மில்லி தண்ணீரில் போட்டு பாதியாகச் சுண்டக்காய்ச்சி காலை, மாலை 60 மில்லி வீதம் சாப்பிட்டு வந்தால், வெள்ளை நோயும், வெட்டை நோயும் குணமாகும்.
துத்திவேரின் மேல்பட்டையை நன்றாக அரைத்து, நல்லெண்ணெய்யில் கலந்து, நன்றாகக் காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு முகப்பருக்களுக்குத் தடவினால் முகப்பரு நீங்கி விடும்.
துத்தி விதையை 10 கிராம் அளவில் எடுத்து பால் விட்டு நன்றாக அரைத்து, பிறகு தேவையான அளவில் பால் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தோல் நோய்கள் அனைத்தும் நிவர்த்தியாகும். தொழுநோயின் ஆரம்பத்தில் இப்படிச் சாப்பிட்டால், மேற்கொண்டு நோய்முற்றாமல் தடுத்துவிடும்.