தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்றால், கொத்தமல்லி இலையில் சாறு எடுத்து அதில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள்தூளைக் கலந்து தோல் மீது தடவி வந்தால் தோல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாற ஆரம்பிக்கும்.
தேங்காய் எண்ணெய் வெதுவெதுப்பான சூடேற்றி, தலைக்கு தடவி நன்கு 20 நிமிடம் மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முடி வளர்ச்சி அதிகரிப்பதோடு, அடர்த்தியாகவும் வளரும். குறிப்பாக இரவில் தலைக்கு மசாஜ் செய்துவிட்டு, காலையில் குளிப்பது நல்ல பலனை தரும்.
கூந்தலுக்கு கெமிக்கல் கலந்த கண்டிஷனர்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக தயிரைப் பயன்படுத்தினால், கூந்தல் நன்கு பட்டுப் போன்று, மென்மையாக இருக்கும்.
பாதாம் பருப்பை அரைத்து தேன், எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவிவர முகம் பளப்பளப்பாகும். உருளைக்கிழங்கு சாறுடன் கடலைமாவையும் சேர்த்து முகத்தில் தேய்த்து வந்தாலும் முகம் பொலிவு பெறும்.
கஸ்தூரி மஞ்சள் தூளை பன்னீரில் கலந்து வெயிலில் வைத்து சூடாக்கி, அதை முகத்தில் தேய்த்து வந்தால் முகப்பருக்கள் மாயமாகிவிடும். செம்பருத்தி இலை, பயத்தம் பயறு இவற்றை சம அளவாக எடுத்து நீர்விட்டு அரைத்து முகத்தில் பூசிவந்தால் முகம் பளபளக்கும்.