கொள்ளு நம் உடலுக்கு அதிக சத்துக்களை கொடுக்க கூடியது. இதில் என்னென்ன சத்துக்கள் உள்ளது என்று பார்த்தால் புரதச்சத்து, நார்ச்சத்து, தசைசத்து, கார்போஹைட்ரெட், இரும்புச்சத்து, மேலும் பாஸ்பரஸ், பொட்டாசியம் என பல சத்துக்கள் உள்ளன. இவை நம் உடலிற்கு நல்ல பலன்களை தரக்கூடியவை.
கொள்ளை ரசம் வைத்து சாப்பிட்டால் சிறுநீரகத்தில் உள்ள உப்புக்களை வெளியேற்றி சிறுநீரகத்தை பாதுகாக்கும். அதேபோல் சிறுநீரக கற்களை வெளியேற்ற கூடியது. சிறுநீரக கற்களை வெளியேற்றுவதால் அடிவயிற்று வலி இருக்காது. அடிவயிற்றில் வலி இல்லாமல் போவதால் சிலருக்கு இடுப்புவலி ஏற்படும், அவர்களுக்கு இடுப்புவலி தானாக குறையும். கொள்ளை ரசம் வைத்து வாரத்திற்கு இரண்டு முறை குடித்து வரலாம்.
கொள்ளுவை உணவில் சேர்ப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஏனென்றால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தேவையான ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன. கொள்ளு தானியங்களில் அதிக அளவில் இரும்புச்சத்து இருக்கின்றன. இது பெண்களின் மாதவிடாய் காலத்தில் அதீத ரத்தப்போக்கு ஏற்படுவதால் உடல் இழந்த சத்துக்களை ஈடு செய்கிறது.