வீட்டில் கட்டாயம் வளர்க்கவேண்டிய சில மூலிகை செடிகளும் பலன்களும் !!

திங்கள், 13 ஜூன் 2022 (12:37 IST)
துளசி: சளி, காய்ச்சல் காலங்களில் பெருமளவு கைகொடுக்கும் மருந்து இது. குழந்தைகளுக்கு பக்குவமாக கொடுக்க பல வழிகள் உண்டு.


ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு நீரில் இலைகளை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி தேன் கலந்து கொடுப்பார்கள். துளசி இலையை ஆவியில் வேக வைத்து இடித்து சாறு எடுத்து இருமலுக்கு கொடுத்தால் சட்டென்று இருமல் குணமாகும்.

தூதுவளை: தூதுவளையில் கால்சியம் சத்து நிறைந்திருப்பதால், எலும்புகளையும், பற்களையும் பலப்படுத்த உதவும். தூதுவளை கீரையை பாசிப்பருப்பு சேர்த்து கூட்டு, அல்லது துவையல் அரைத்து வாரத்திற்கு ஒருநாளாவது நிச்சயம் எடுத்துகொள்ள வேண்டும்.

குறிப்பாக சைனஸ், நெஞ்சுசளி, கோழை இருக்கும் போது இதன் சமூலத்தை தேனில் குழைத்து சாப்பிட்டால் ஆஸ்துமாவின் தீவிரம் அதிகமாகாமல் இருக்கும்.

அருகம் புல்: மிக எளிதாக நமக்கு கிடைக்க கூடிய பொருள்களில் அருகம் புல் ஒன்று. அருகம் புல்லை நறுக்கி நீரில் ஊறவைத்து மறுநாள் காலை அந்த நீரை வடிகட்டி காய்ச்சி குடித்தால் கண் உஷ்ணம் போன்றவை தீரும். அருகம் புல் சாறு உடல் எடை குறைப்பிலும் பயன்படுகிறது.

கற்பூரவள்ளி: கற்பூரவள்ளி இருக்கும் இடமே தனி மணத்துடன் இருக்கும். இதனுடைய தண்டு, இலைச்சாறு இரண்டையும் கைவைத்தியத்துக்கு பெருமளவு பயன்படுத்துவார்கள். கற்பூரவள்ளி இலை சளி, இருமலை கட்டுப்படுத்தும் என்றாலும் அதிக காரத்தன்மை கொண்டது.

குப்பைமேனி: குப்பைமேடுகளில் கிடக்கும் இந்த குப்பைமேனி இலை கண்டிப்பாக அனைவரது வீட்டிலும் இருக்க வேண்டிய மூலிகை. குழந்தைகள் மண்ணில் விளையாடி சருமம் முழுக்க சொரி சிரங்கு உண்டாகும் போது குப்பைமேனி இலையைத்தான் அரைத்து பற்றுபோடுவார்கள். படர்தாமரை, சொறி, பூச்சிக்கடி, சரும அலர்ஜி அனைத்துக்கும் இவை பலன் தரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்