மாதவிடாய் காலத்தின் முதல் மூன்று நாட்களுக்கு வெந்தயம் தூள் தினமும் மூன்று முறை எடுத்துக்கொள்வதுடன், மீதமுள்ள நாட்களில் தினமும் 900 மி.கி. வெந்தயத் தூள் எடுத்து கொள்வதினால் பெண்களுக்கு வலியுடன் கூடிய மாதவிடாய் குணமாகிறது.
வெந்தயத்தை அரைத்து, குளிர்ந்த கடுகு எண்ணெய்யுடன் கலக்கவும். இந்த எண்ணெய்யை உச்சந்தலையில் தடவினால் முடி ஆரோக்கியமாக இருக்கும். இது உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், மயிர்க்காலின் வலிமையை அதிகரிப்பதற்கும் உதவுகிறது.
ஊறவைத்த வெந்தயம் சாப்பிடுவது மலச்சிக்கலை போக்க உதவுகிறது. இது கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து நிறைந்ததாக இருக்கிறது, இதனால் அனைத்து செரிமான பிரச்சினைகளையும் போக்க உதவுகிறது. இதனால் பசியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் எடையை நிர்வகிக்க உதவுகிறது.