பாதாம் பருப்பில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும் !!

தினமும் ஊறவைத்த 7 பாதாமை சாப்பிடும் பொழுது, நமது உடலில் தேவையற்ற கொழுப்பை நீக்கி நல்ல கொழுப்பை மட்டும் உடல் ஏற்றுக் கொள்கிறது.

பாதாம் இயற்கையாகவே முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. ஊறவைத்த 7 பாதாமை நன்கு அரைத்து அதனுடன் தேங்காய் எண்ணெய் (அ) ஆலிவ் எண்ணெய் சேர்த்து  தலைமுடிக்கு பயன்படுத்தி வந்தால் அதிகமான முடிவளர்ச்சி அடைவதை பார்க்கலாம்.
 
பாதாமில் ஃபோலிக் அமிலம் அதிகளவு நிறைந்துள்ளது. எனவே கர்ப்பிணி பெண்கள் பாதாம் பருப்புகளை தொடர்ந்து சாப்பிடுவதினால் தங்களுக்கு பிறக்கும் குழந்தை மிகவும் ஆரோக்கியமாக வளரும்.
 
பாதாமில் சோடியம் குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளதால், இதனை ஸ்நாக்ஸ் சாப்பிடும் நேரத்தில் சாப்பிட்டால், இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.
 
பாதாம் கலந்த பாலை குழந்தைக்கு தினமும் பருக தருவதன் மூலம், அவர்களின் உடலின் எதிர்ப்பு ஆற்றலை அதிகரித்துக் கொள்ள முடியும்.
 
பாதாம் பருப்பில் உள்ள புரதச் சத்தானது மூளையின் இயக்க ஆற்றலை அதிகரிக்கிறது. மேலும் நினைவாற்றல் மற்றும் மூளையின் சக்தியைப் பெருகுகின்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்