அவரைக் காயில் லெசித்தின் என்னும் நார்ப் பொருள் உள்ளது. இது குடலில் மலம் தங்கõமல் பார்த்துக் கொள்வதால் நாம் பேசும்போதும், மூச்சு விடும்போதும் நாற்றம் எடுக்காது. எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலினை உற்பத்தி செய்து கொடுப்பதுடன் வாய் நாறாமலும் பார்த்துக் கொள்கிறது அவரைக்காய்.
குடல் பகுதிகள் நன்கு செயல்பட்டுக் கொண்டே இருந்தால் வாய் நாறாது. காய்ச்சலும் வராது. இதற்கு விற்றமின் சி அதிக அளவில் உள்ள கொத்தமல்லிக்கீரை உதவும். இந்தக் கீரையில் 15 கிராம் கீரையை மென்று திண்ணலாம். இல்லாவிட்டால் காலையிலோ அல்லது மதிய உணவிலோ கொத்தமல்லிக் கீரைத் துவையல் இடம்பெறுவது நல்லது. இதனால் வாய் நாற்றம் தடுக்கப்படும்.