எளிதில் கிடைக்கக்கூடிய வெந்தயத்தை கொண்டு சருமத்தை எளிதாக பராமரிக்க !!

வெந்தயத்தை கொண்டு தலைமுடியின் ஆரோக்கியத்தை மட்டுமின்றி சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். வெந்தயம் எளிதில் கிடைக்கக்கூடிய பொருள் என்பதால், இதனைக் கொண்டு சருமத்தை எளிதில் பராமரிக்கலாம்.
 


தினமும் வெந்தயத்தை பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி மென்மையாக 15 நிமிடம மசாஜ் செய்து பின் கழுவ வேண்டும். இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமத்துளைகளில் ஏற்பட்டுள்ள அடைப்புக்கள் அனைத்தும் நீங்கி, சருமம் சுத்தமாக இருக்கும். இதனை தினமும் செய்து வரலாம்.
 
வெந்தயம் சிறந்த கிளின்சராகவும் செயற்படும். இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமத்துளைகளில் ஏற்பட்டுள்ள அடைப்புக்கள் அனைத்தும் நீங்கி,  சருமம் சுத்தமாக இருக்கும். 
 
பொலிவான முகம்: பொலிவிழந்து காணப்படும் முகத்தை பொலிவாக்க நினைத்தால், வெந்தய ஃபேஸ் பேக் போடுங்கள். அதற்கு வெந்தயத்தை நீரில் ஊறவைத்து  பேஸ்ட் செய்து, பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊறவைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
 
சருமத்தை வெள்ளையாக்கும்: வெந்தயத்தைக் கொண்டும் சருமத்தை வெள்ளையாக்கலாம். அதற்கு வெந்தய பொடியை தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில்  தடவி சிறிது நேரம் ஊறவைத்து பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தின் நிறம் அதிகரிக்கும்.
 
வெந்தயம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும். அதற்கு வெந்தயத்தை பொடி செய்து, அதனை தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்து பின் கழுவ வேண்டும். இதனால் பருக்கள் வருவது தடுக்கப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்