மலச்சிக்கல் பிரச்சனைக்கு எளிய இயற்கை வழிகள்...!!

Webdunia
வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பு சேர்த்து கலந்து குடித்து, 15 நிமிடம் கழித்து எதையும் சாப்பிடுங்கள். இதனால் குடலியக்கம் சிறப்பாக செயல்பட்டு, மலச்சிக்கல் நீங்குவதோடு, செரிமான பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம்.

மலச்சிக்கலால் அசுத்தமான வயிற்றை சுத்தம் செய்ய, சின்ன வெங்காயத்தை எண்ணெயில் போட்டு வதக்கி ஒரு கையளவு சாதத்துடன் சேர்த்து சாப்பிடுங்கள்.இதனால் வெங்காயத்தில் உள்ள மருத்துவ குணம் மலச்சிக்கலைத் தடுப்பதோடு, வயிற்றையும் சுத்தம் செய்யும்.
 
மலச்சிக்கல் ஒருவருக்கு ஏற்படுவதற்கு உடலுழைப்பு இல்லாமை, அதிகப்படியான மன அழுத்தம், வயது, குறிப்பிட்ட வகை வைட்டமின் மருந்துகள், நார்ச்சத்து  மற்றும் நீர்ச்சத்து குறைபாடு போன்றவை முக்கிய காரணங்களாக உள்ளன.
 
ஒரு பாத்திரத்தில் 5 கப் நீரை ஊற்றி நன்கு கொதிக்க வைத்து, பின் அதில் உலர்ந்த கொடி முந்திரி மற்றும் பேரிச்சம் பழம் சேர்த்து, ஜாம் போன்றாகும் வரை நன்கு வேகவைக்க வேண்டும். இதனால் 20 டேபிள் ஸ்பூன் அளவிலான ஜாம் கிடைக்கும். தயாரிக்கப்பட்ட ஜாம்மை காலை உணவின் போது, தயிர், செரில் அல்லது பிரட்  டோஸ்ட் போன்றவற்றுடன் சேர்த்து உட்கொள்ளலாம்.
 
உலர்ந்த கொடிமுந்திரியை இரவில் படுக்கும் போது நீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் நீருடன் அந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் உடனடி  பலன் கிடைக்கும்.
 
வெதுவெதுப்பான பாலில் 1 டீஸ்பூன் நெய் சேர்த்து கலந்து, இரவில் படுக்கும் முன் குடித்தால், மறுநாள் காலையில் மலச்சிக்கல் பிரச்சனை இருந்த இடம் தெரியாமல் அகலும்.
 
திராட்சையில் மலமிளக்கும் பண்புகள் உள்ளது. இது நாள்பட்ட மலச்சிக்கலைத் தடுக்கும். அதிலும் உலர் திராட்சையை இரவில் படுக்கும் முன் நீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் நீருடன் சேர்த்து திராட்சையை சாப்பிட்டால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்