ஆஸ்துமா நோய் இருப்பது தெரியவந்தவுடன் உணவுக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பது அவசியம். நோயைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்து முழுமையாகச் சிகிச்சை அளிக்க சித்த மருத்துவத்தில் நல்ல மருந்துகள் உள்ளன.
பூலாங்கிழங்கு, புஷ்கரமூலம், புளிவஞ்சி, ஏலரிசி, பெருங்காயம், அகில், துளசி, கீழாநெல்லி, கீரைப்பாலை, காட்டுக் கோரை கிழங்கு. இந்த பத்தையும் ஒன்றாக கலந்து தினமும் உண்டால். ஆஸ்துமா வெகு விரைவில் குணம் ஆகும். ஆஸ்துமாவிற்கு இதே போல் நிறைய மூலிகைகள், மருந்துகள் இருக்கிறது.
முசுமுசுக்கை, கசலாங்கண்ணி இலைகளை நாட்டுச் சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து வடிகட்டினால் ஆஸ்துமாவுக்கான மூலிகை டீ தயார். இதை தினமும் காலையிலும் இரவிலும் சாப்பிடுவது சிகிச்சையின் ஒரு பகுதி. மூச்சுக் குழலை விரிவடையச் செய்து மூக்கடைப்பைத் தவிர்க்கவும் சளியை எளிதாக வெளியேற்றவும் இந்த மூலிகை டீ உதவும்.
மிளகு கல்பம் (தூள்): இது மிளகுடன் 100 கி முதல் நாள் கரிசலாங்கண்ணிச் சாறு முழுகும் அளவு, இரண்டாம் நாள் தூதுவளைச் சாறு, மூன்றாம் நாள் ஆடாதொடைச் சாறு ஆகியவற்றைக் கொண்டு வெயிலில் வைத்து தரியாரிக்கப்படுகிறது. காலை, இரவு ஆகிய இரு வேளையும் உணவு சாப்பிடுவதற்கு முன்பு இந்த மிளகு கல்பத்தை 1/2 கிராம் தேனுடன் கலந்து அரை டீஸ்பூன் சாப்பிட வேண்டும்.
பூரண சந்திரோதயச் செந்தூரம் (தூள்), வாசாதி லேகியம்: இவற்றை காலை, இரவு இரு வேளையும் உணவு சாப்பிட்ட பிறகு சாப்பிட வேண்டும். பூரண சந்திரோதயச் செந்தூரத்தைத் தேனில் குழைத்துச் சாப்பிட வேண்டும். வாசாதி லேகியத்தை நெல்லிக்காய் அளவு எடுத்துச் சாப்பிட வேண்டும்.