புரதச்சத்துக்கள் அதிகம் நிறைந்து காணப்படும் பாலக்கீரை !!

திங்கள், 28 பிப்ரவரி 2022 (14:25 IST)
பாலக்கீரையில் வைட்டமின் ஏ அதிக அளவு நிறைந்து காணப்படுகிறது. இதில் மெக்னீசியம், ஜிங்க், காப்பர் மற்றும் விட்டமின் கே அதிகம் உள்ளதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாக இருப்பதற்கு உதவுகிறது.


பாலக் கீரை நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இரத்ததில் உள்ள சர்க்கரையின் அளவை நிலையாக வைத்திருக்க இந்த கீரை உதவுகிறது.

பாலக் கீரையை அதிகம் எடுத்து கொண்டால் ரத்தத்தில் ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை அதிகமாகும். இதனால் ரத்த சோகை நோய் வராமல் தடுக்க உதவுகிறது.

கர்ப்பிணிகளுக்கு தேவையான அத்தியாவசிய சத்தான போலிக் ஆசிட் இந்த கீரையில் அதிகம் உள்ளது. கர்பிணிகள் இதனை அதிகம் எடுத்துக் கொண்டால் நல்லது.

பாலக்கீரையில் புரத சத்து நிறைந்துள்ளது, எனவே இந்த கீரையை தினமும் எடுத்து கொண்டால் மாரடைப்பு, ரத்த குழாய்கள் அடைப்பு போன்ற இதய நோய்கள் வராமல் தடுக்கலாம்.

கண் பார்வை நன்றாக தெரிய பாலக் கீரை உதவி செய்கிறது. கண்ணில் ஏற்படும் நோய்களான மாலைக்கண் நோய், மற்றும் கண்களில் ஏற்படும் அரிப்பு, போன்றவை வராமல் தடுக்கும் தன்மை கொண்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்