வெங்காயத்தாளில் குறைந்த கலோரிகளே இருக்கின்றன. மேலும் வெங்காயத்தாளில் வைட்டமின் சி, பி2 மற்றும் தயமின் உட்பட பல வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. வெங்காயம் போலவே வெங்காயத்தாளிலும் கூட கந்தக சத்து அதிகமாக உள்ளது. அதிக அளவிலான கந்தக சத்து பல ஆரோக்கிய நன்மைகளை நமது உடலுக்கு வாரி வழங்குகிறது.
வெங்காயத்தாள் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தி, புற்றுநோயை குணப்படுத்தும்.வெங்காயத்தாளின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளினால், செரிமான உபாதைகளுக்கு நிவாரணம் கூட வழங்குகிறது.