எந்த சத்துக்கள் முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன தெரியுமா...?

முட்டையில் புரோட்டீன், வைட்டமின் பி12, இரும்புச்சத்து, துத்தநாகம், ஒமேகா கொழுப்பு அமிலங்கள் உள்ளிட்ட உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. இவை முடி வளர்ச்சிக்கு ஊட்டமளிக்கக்கூடியவை. 
 
பீன்ஸில் கறுப்பு பீன்ஸ், கிட்னி பீன்ஸ், நேவி பீன்ஸ், பின்டோ பீன்ஸ், சோயா பீன்ஸ் எனப் பல வகைகள் உள்ளன. இந்த பீன்ஸ் வகைகளில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் பி, சி மற்றும் துத்தநாகம் உள்ளிட்ட தாதுஉப்புக்கள் நிறைவாக உள்ளன. இவை தலைமுடிக்கு நல்ல உறுதியையும் வளர்ச்சியையும் கொடுக்கும். 
 
பசலைக் கீரையில் அதிகளவு  இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி, புரதம் உள்ளன. முடி உதிர்வுக்கு ஒரு முக்கியக் காரணமான இரும்புச்சத்து குறைபாட்டுக்கு தீர்வாக இது இருக்கிறது. 
 
ஓட்ஸில் வைட்டமின் பி-யும் தாதுஉப்புக்களும் நிறைவாக உள்ளன. மெலனின் என்ற நிறமி, முடிக்கு நிறமளிக்கக் கூடியது. ஓட்ஸ்சில் உள்ள சத்துக்கள் மெலனின் உற்பத்தியை ஊக்குவிக்கின்றன. 
 
சர்க்கரை வள்ளிக்கிழங்கில் வறட்சியான சருமம், முடி, பொடுகு போன்றவை வைட்டமின் ஏ குறைபாட்டாலும் வரக்கூடியவை. இதில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளதால், செல் மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. 
 
சூரியகாந்தி விதைகள் அதிக ஆற்றல் தரக்கூடியது. நல்ல சுவையுள்ளது; இதை மற்ற பருப்புகள்போலவே மென்று தின்னலாம். சூரியகாந்தி விதைகளில் துத்தநாகம், மக்னீசியம், பையோட்டின், வைட்டமின் பி, இ, புரோட்டீன், இரும்புச்சத்து, பொட்டாசியம், தாமிரம், கால்சியம், செலினியம் போன்ற தலைமுடியைப் பாதுகாக்கும் ஊட்டச்சத்துகள் உள்ளதால் முடி இழப்பை தடுப்பதோடு, தலைமுடியை வளமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்