சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஆலிவ் எண்ணெய் !!

தினமும் காலையில் தூங்கியெழுந்ததும் ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் அருந்த வேண்டும் மற்றும் இரவில் உறங்க செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் அருந்த வேண்டும். இந்த முறையை மலச்சிக்கல் தீரும் வரை பயன்படுத்த வேண்டும்.

உணவில் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவதால் நமது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தை ஆசுவாசபடுத்தி நமது மன அழுத்தங்கள் முற்றிலும் நீங்குகிறது.
 
சுடுநீரில் எலுமிச்சம் சாற்றை பிழிந்து,கலக்கி அந்நீரில் சிறிது பாதத்தை வைத்திருந்து பிறகு பாதவெடிப்பு ஏற்பட்ட இடங்களில் ஆலிவ் எண்ணையை தடவி வந்தால் பாத வெடிப்பு கூடிய சீக்கிரம் குணமாகும்.
 
ஆலிவ் எண்ணெய்யில் இருக்கக்கூடிய வைட்டமின் இ மற்றும் ஏ சத்துக்கள் முகத்தின் அழகை பாதுகாத்து, மேம்படுத்த உதவும். இந்த வைட்டமின்கள் முகத்தில் ஏற்படும் பரு, வடு, தழும்புகள் போன்றவற்றை முற்றிலுமாக போக்க உதவும்.
 
ஈரப்பதம் குறைவதாலும் சில வகையான நுண்ணுயிர்கள் தொற்றுகளாலும் சிலருக்கு தோலில் அரிப்பு, தோல் வறட்சி மற்றும் வெடிப்பு ஏற்படுவதை தடுக்கிறது. தோல் பளபளப்பை மேம்படுத்தி இளமை தோற்றத்தை பாதுகாக்கிறது.
 
ஆலிவ் எண்ணெய்யில் காணப்படும் வைட்டமின் இ, சருமத்தில் ஏற்படும் அழற்சி, முகப்பரு போன்றவற்றை குணப்படுத்தி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். மேலும் இது சருமத்தில் ஏற்படக்கூடிய தீவிர பிரச்சனைகளான சொரியாசிஸ் மற்றும் தோல் புற்றுநோய் போன்றவை ஏற்படாமல் தடுக்க உதவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்