சில பெண்களுக்கு மீசை போன்று பூனை முடி முளைத்திருக்கும். சிலருக்கு முடி கன்னத்தின் பக்கவாட்டிலும் முளைக்கும். குப்பைமேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் மூன்றையும் மைப்போல் நன்றாக அரைத்து இரவில் படுக்குமுன் முடி இருக்குமிடத்தில் ஒரு வாரத்திற்கு பூசி வந்தால் ரோமங்கள் உதிர்ந்து விடும்.
முகம் அழகாக இருக்கும், ஆனால் கழுத்துக்கு முன்னும் பின்னும் கருமையாக இருக்கும். இதை நீக்க, நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பீர்க்கங்காய் கூடு வாங்கி, குளிக்கும்போது கழுத்தில் சோப் தடவி, கூட்டை வைத்து நன்றாக தேய்த்து கழுவுங்கள். நாளடைவில் கழுத்து கருமை நிறம் மாறிவிடும்.
சில பெண்களுக்கு இளநரை தோன்ற ஆரம்பிக்கும். இவர்கள் வீரியமான ஷாம்புகளை உபயோகிப்பதை தவிர்த்து, சீயக்காயை பயன்படுத்தலாம். இல்லாவிட்டால் கொட்டை எடுத்த நெல்லிக்காய்களுடன், எலுமிச்சம்பழச் சாறு விட்டு, நன்றாக அரைத்து, மாதம் ஒருமுறை தலைக்கு தேய்த்து குளித்தால் இளநரை மறைந்துவிடும். முடி உதிர்வதும் கட்டுப்படும்.