கொடுக்காய்ப்புளியில் உள்ள சத்துக்களும் அதன் நன்மைகளும் !!

செவ்வாய், 24 மே 2022 (10:34 IST)
கொடிக்காய், கொடுக்காய்ப்புளி, சுரட்டிக்காய், கோணக்காய் என்றெல்லாம் இதற்கு பெயர் உண்டு. கொடுக்காய்ப்புளியானது இனிப்பு அல்லது துவர்ப்பு சுவையினையோ அல்லது இரண்டும் கலந்த சுவையினையோ கொண்டிருக்கும்.


கொடுக்காய்ப்புளியின் சதைப்பகுதி, இலை, பட்டை, பூ ஆகியவை மருந்துப் பொருளாக உயோகிக்கப்படுகின்றன.

கொடுக்காய்ப்புளியில் நீர்ச்சத்து, நார்ச்சத்து, புரதச்சத்து, கார்போஹைட்ரேட் ஆகியவையும் தாதுஉப்புக்களான கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம் ஆகியவை காணப்படுகின்றன.

கொடுக்காய்ப்புளி காயில் உள்ள விட்டமின் பி1 மூளை மற்றும் நரம்புகளின் வளர்ச்சியை ஊக்குவித்து நன்கு வளரச் செய்கிறது. கொடுக்காய்ப்புளி மரத்தின் பூவானது பல்வலி, ஈறுகளின் பிரச்சினைக்கும் இது தீர்வளிக்கிறது.

கொடுக்காய்ப்புளி பழத்தில் காணப்படும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் பற்கள் மற்றும் எலும்புகளை பாதுகாத்து அவற்றை வலுவாக்குகிறது. இதன் இலைகள் கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்தப்படுகிறது.

கொடுக்காய்ப்புளியின் பட்டையிலிருந்து மஞ்சள் நிறச்சாயம் தயார் செய்யப்படுகிறது. இதன் விதைகளிலிருந்து எண்ணைய் எடுக்கப்படுகிறது. இவ்வெண்ணைய் சோப்பு தயாரிப்பிலும், சமையலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. கொடுக்காய்ப்புளி தாவரமானது மண்ணில் நைட்ரஜனை நிலைநிறுத்தி மண்ணினை வளப்படுத்துகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்