பீன்ஸை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் பயன்கள் !!

திங்கள், 23 மே 2022 (16:45 IST)
பீன்ஸ் காயை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் இருக்கும் நச்சுகள் நீங்கி ரத்தம் சுத்தம் பெறும்.


பீன்ஸ் காயில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் அதிகம் இருக்கின்றன. இது உடலில் சிவப்பு ரத்த அணுக்கள் பிராண வாயுவை கிரகிக்கும் தன்மையை அதிகப்படுத்துகிறது. இதனால் உடலுக்கு அதிக உற்சாகமும், எளிதில் உடல் சோர்வு அடையாத நிலையை தருகிறது.

உடலின் அனைத்து உறுப்புகளின் சீரான செயல்பாடுகளுக்கும், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதற்கும் உடலில் ரத்த ஓட்டம் சரியாக இருக்க வேண்டியது அவசியம்.

ரத்தத்தில் வெள்ளை அணுக்களின் குறைபாடுகளால் இரத்தச் சோகை ஏற்படுகிறது. இரத்தச் சோகை இருப்பவர்கள் பீன்ஸ் காயை அதிகம் சாப்பிடுவதால் ரத்த சோகை நீங்கி உடலை மீண்டும் ஆரோக்கியமான நிலைக்கு திரும்புகிறது.

கர்ப்பிணி பெண்கள் கொத்தவரங்காய் அதிகம் உணவில் சேர்த்து உண்பதால் கருவில் வளரும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு பேருதவி புரிகிறது.

பீன்ஸ் காய்களை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் நரம்புகளில் இறுக்கம் ஏற்படுவதை தடுத்து, மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை வெகுவாக குறைக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்