இம்மரத்தில் வேர், பட்டை, மரப்பட்டை, வேப்பங் கொட்டையின் மேல் ஓடு, உள்ளிருக்கும் பருப்பு, வேப்பமரத்து பால், வேப்பம் பிசின், வேப்பங்காய், வேப்பம் பழம், பூ, இலை, இலையின் ஈர்க்கு, வேப்பங் கொழுந்து போன்றவை மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளபடியால் அவை அனைத்துமே மருந்துப் பொருளாகச் சேர்க்கப்பட்டு வருகிறது.
வேப்பம்பூவானது நிம்பஸ்டி ரோல் என்ற பொருளை கொண்டுள்ளது. இது மனித உடலில் சுரக்கும் ஹார்மோன்களில் ஒன்றை ஒத்து போவதால் இது பசியை தூண்டிடவும், பித்தம், வாந்தி, வாதம் சமந்தப்பட்ட நோய்களை குணபடுத்துகிறது.