நெல்லிக்காயில் வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் அதிகமாக நிறைந்துள்ளன. அல்சர் உள்ளவர்கள், தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், அல்சரைக் குணப்படுத்தலாம்.
நெல்லிக்கனிகளை அதிகம் சாப்பிட்டு வருபவர்களுக்கு தோலில் உள்ள செல்கள் புத்துணர்வு பெற்று, ஓட்டத்தை நன்கு தூண்டி தோலில் சுருக்கங்கங்கள் போன்றவை ஏற்படுவதை தடுத்து, இளமையான தோற்றத்தை நீட்டிக்க செய்கிறது.
தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பிட்டால் மரணத்தை தள்ளிப்போடலாம் என்றும் கூறுவது உண்டு. முடி பிரச்சனைகள், சரும பிரச்னைகள் மட்டுமின்றி, ஆரோக்கியமும் மேம்படும். ஞாபக சக்தி அதிகரிக்கும். நெல்லிக்கனியில் சிறு நெல்லி, பெரு நெல்லி என்று இரண்டு வகை இருக்கிறது இதில் பெருநெல்லி தான் அதிக மருத்துவ குணம் கொண்டது.
உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு, உடல் எடையைக் குறைக்க உதவும். நெல்லிக்காயில் உள்ள நார்ச்சத்து குடலியக்கத்தை சீராக்கி, மலச்சிக்கல் ஏற்படுவதைத் முற்றிலுமாக தடுக்கும்.
கண்பார்வை தோல் வளர்ச்சி மற்றும் தலைமுடி வளர்ச்சிக்கும் நெல்லிக்கனி உதவக்கூடியது. உயிர்ச்சத்து குறைவால் பல்லில் ரத்தம் வந்தால், நெல்லிக்கனி சாப்பிட நல்ல பலன்களை காணலாம்.