முடி உதிர்வை தடுத்து முடி அடர்த்தியாக வளர இயற்கையான வழி!

Webdunia
ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கினை வகிக்கிறது. ஆனால் அத்தகைய முடியானது  தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் அதிகம் பாதிக்கப்பட்டு, முடி  கொட்டுதல், அடர்த்தி குறைதல் போன்றவை ஏற்படுகிறது.



மக்கள் இயற்கை வழிகளை மறந்து செயற்கை வழிகளை பின்பற்ற  ஆரம்பித்து, அதனால் பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. முடி உதிர்வை தடுத்து, முடியின் அடர்த்தியை அதிகப்படுத்தி நன்றாக வளர்வதற்கு இயற்கையான வழி உள்ளது.
 
இதனை சரிசெய்ய நாம் ஒரு எளிய வழியை பார்ப்போம். முட்டையின் மஞ்சள் கரு 2 டேபிள் ஸ்பூன், விளக்கெண்ணெய் 1  டேபிள் ஸ்பூன், சோற்றுக் கற்றாழை ஜெல் 1 டேபிள் ஸ்பூன் எடுத்து கொள்ள வேண்டும். இந்த விளக்கெண்ணெய், முட்டையின்  மஞ்சள் கரு மற்றும் சோற்றுக் கற்றாழை சாறு ஆகிய மூன்றையும் நன்றாக கலந்து முடியின் உச்சந்தலை முழுவதும் தடவ வேண்டும். பின்னர் அரை மணி நேரத்திற்கு பிறகு குளுர்ந்த நீரில், ஷாம்பு அல்லது சீகைக்காய் பயப்படுத்தி குளிக்க வேண்டும்.
 
இதனால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்றால், விளக்கெண்ணெய் நமது உடலுக்கு குளிர்ச்சியை அளிக்குக்ம். தலைமுடியை கருமையாகவும், நல்ல அடர்த்தியாக வளருவதற்கு உதவுகிறது. முட்டையின் மஞ்சள் கருவானது தலைமுடியை உதிர்வதிலிருந்து கட்டுப்படுத்தும் கண்டிஷனராக செயல்படுட்வதுடன், வெளிப்புற மாசுக்களிலுருந்தும் தலைமுடியை பாதுகாக்கிறது.
 
சோற்றுக் கற்றாழை அருமையான பலன்களை கூந்தலுக்கு அளிக்கிறது. இதன் மூலம் இது முடியை மென்மையாக்கி, முடியின்  வறட்சியை போக்கி முடி பளபளப்பாக்க வளரும்.
அடுத்த கட்டுரையில்