உடலுக்கு ஆரோக்கியம் தரும் மீன் உணவின் மருத்துவ பயன்கள் !!

தொடர்ந்து மீன் உண்ணும் பழக்கமானது எலும்புத்தேய்வு, சொரி சிரங்கு மற்றும் நோய் எதிர்ப்புத்தன்மை குறைவால் ஏற்படும் நோய்கள் போன்றவற்றைக் குறைக்க வழி செய்கிறது.

மீன் உணவு உடலுக்கு ஆரோக்கியம் தரும் மாமிச உணவாகும். தொடர்ந்து மீன் உணவை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கிறது. மீனில் நிறைந்திருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நல்ல பார்வைத்திறனுக்கும் உதவுகிறது.
 
மீன் உண்ணும் பழக்கம் இரத்த உறைவைக் குறைப்பதால் இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. மீன் உண்ணும் குழந்தைகளுக்கு  ஆஸ்த்துமா நோய் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. மீனை அதிகம் சாப்பிடுபவர்கள் மன அழுத்தம் ஏற்படுவதிலிருந்து தப்பிக்கலாம்.
 
மீன்களில் நிறைந்துள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் வாய், உணவுக்குழாய், பெருங்குடல், கர்ப்பப்பை, மார்பகம் மற்றும் புரோஸ்டேட் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை 30 முதல் 50 சதவீதம் வரையிலும் குறைக்கிறது.
 
மீன்களில் அடங்கியுள்ள கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மக்னீஷியம் ஆகிய தாதுச்சத்துக்கள் எலும்பு வளர்ச்சிக்கும், இரும்புச்சத்து இரத்தத்தில் சிவப்பணுக்களை  அதிகரிக்கவும், மாங்கனீசு துத்தநாகம் மற்றும் தாமிரம் போன்ற தாதுச்சத்துக்கள் நொதிகளின் வினையாக்கத்திற்கும், அயோடினானது முன் கழுத்துக்கழலை நோய்  ஏற்படாமல் பாதுகாக்கவும் பெரிதளவும் உதவுகின்றன.
 
பெண்கள் கர்ப்பகாலத்தில் மீன் சாப்பிடுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம். தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க மீன் பயன்படுகிறது. பெண்கள் மீனை அதிக அளவில்  சாப்பிடுவதால் எலும்புகள் பலமடைந்து பிரசவ நேரத்தில் வலியை தாங்கும் சக்தியை கொடுக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்