கோரைக்கிழங்கால் பித்தம், தேக எரிச்சல், தாகம், குதிகால் வாதம், குளிர் சுரம், வாத சுரம் முதலியவை நீங்கும். கோரைக்கிழங்கு, காய்ச்சாத பசும் பால் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து உடலில் பூசிக் குளித்து வர வியர்வை நாற்றம் குணமாகும்.
கோரைக்கிழங்கை மேல் தோலை நீக்கி சுத்தம் செய்து இடித்து பொடி செய்து காலை, மாலை என 1 கிராம் அளவு தேனில் கலந்து சாப்பிட புத்திக்கூர்மை, தாது விருத்தி உடல் பொலிவு உண்டாகும்.
பச்சையான கோரைக் கிழங்குகளைச் சேகரித்து நீரில் கழுவி சுத்தம் செய்து கொண்டு அரைத்து மார்பகத்தல் பூசி வர தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும். கோரைக்கிழங்கு சூரணம் ½ தேக்கரண்டி அளவு காலை, மாலை தேனில் உட்கொள்ள புத்தி கூர்மை அதிகமாகும்.