மிளகில் வைட்டமின் சி, பி, வைட்டமின் ஏ, கரோட்டின் போன்ற சத்துக்களும் உள்ளது. இவை அனைத்தும் உங்கள் உடலில் இருக்கும் புற்றுநோயை ஏற்படுத்தும் நச்சுக்களை வெளியேற்ற உதவும்.
தினமும் உணவில் மிளகை சேர்த்து கொள்வதால் மூளையை நன்கு செயல்பட வைப்பதுடன், வயதாவதால் ஏற்படும் மறதி, அல்சைமர், மூளைக்கோளாறுகள் போன்றவற்றை சரிசெய்ய உதகிறது.
நீங்கள் சருமத்திற்கு உபயோகப்படுத்தும் பொருட்களில் சிறிதளவு மிளகை கலப்பதாலும், தினமும் சாப்பிட்டு வருவதாலும் உங்களுக்கு வயதாவதையும், முகத்தில் சுருக்கம் ஏற்படுவதையும் குறைக்கும்.