நாட்டு சர்க்கரையில் உள்ள எண்ணற்ற பயன்களை பற்றி தெரிந்துக்கொள்வோம் !!

புதன், 11 மே 2022 (16:17 IST)
வெள்ளை சர்க்கரையில் ரசாயனங்கள் கலப்பதை போன்று நாட்டு சர்க்கரையில் ரசாயனங்கள் கலப்பதில்லை. இது முற்றிலும் இயற்கையான முறையில் கரும்பு சாற்றிலிருந்து தயார் செய்யப்படுவதால், இயற்கையாகவே இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன.


வெள்ளை சர்க்கரையில் உள்ள சில வேதிப்பொருள்கள் நமது உடலில் இன்சுலின் சுரப்பை பாதித்து, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து, நீரிழிவு நோயை ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. வெள்ளை சர்க்கரைக்கு பதில் நாட்டு சர்க்கரையை பயன்படுத்தினால் இவ்வாறான பாதிப்புகள் ஏற்படாது.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் வெள்ளை சர்க்கரை மற்றும் இனிப்புகளை தவிர்ப்பது நல்லது. இதற்கு பதிலாக நாட்டு சர்க்கரையை சேர்க்கலாம். இதில் குறைந்த அளவில் கலோரிகள் உள்ளதால் உடல் எடை குறைய உதவுகிறது.

வெள்ளை சர்க்கரையை பயன்படுத்தி செய்யப்படும் இனிப்பு உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு மலச்சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளது. வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக நாட்டு சர்க்கரையை சேர்த்துக்கொண்டால் குடல்களை பலப்படுத்தி, மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் இருக்க உதவும்.

கிருமிகளால் உடலில் நோய்கள் ஏற்படாமல் காப்பது நமது உடலில் இயற்கையாகவே இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி தான். நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த உதவக்கூடியது நாட்டு சர்க்கரை. எனவே நாட்டு சர்க்கரையை உணவில் சேர்ப்பது நல்லது.

செரிமான பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் உணவில் நாட்டு சர்க்கரையை சேர்த்து கொள்ளலாம். சிறிது இஞ்சியை நீரில் கொதிக்க வைத்து நாட்டு சர்க்கரை சேர்த்து குடித்தால் அஜீரண கோளாறுகள் நீங்கும்.

தினமும் உடல் சோர்வை போக்க, வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக நாட்டு சர்க்கரையை சேர்த்து கொள்ளலாம். இது உடலில் உள்ள செல்களை புத்துணர்வூட்டி சுறுசுறுப்பாக வைத்து கொள்ள உதவுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்