சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாக அமையும் குதிரைவாலி அரிசி!
குதிரைவாலியில் நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை அதிகமாக உள்ளது. குதிரைவாலியில் கோதுமையில் இருப்பதை விட ஆறு மடங்கு நார்ச்சத்து உள்ளது.
சர்க்கரை நோயாளிகளுக்கு மருத்துவரிடமிருந்து வரும் முதல் அறிவுரையே அரிசி உணவைத் தவிருங்கள் என்பதே. இதனாலேயே சர்க்கரை நோயாளிகள் சாப்பாடு என்றாலே எரிச்சலடைந்து மிகப்பெரும் மன அழுத்ததிற்கு ஆளாகின்றனர். இதனைத் தடுக்க மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்திருப்பது
சிறுதானியங்களில் ஒன்றான ஊட்டச்சத்துகள் மிகுந்த குதிரைவாலி அரிசி. இதில் காணப்படும் அபரிமிதமான நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்துக்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு உருவாகும் மலச்சிக்கலைத் தடுத்து கொழுப்பு அளவை குறைக்க உதவி செய்கிறது.
இந்த குதிரைவாலி அரிசி ரத்தத்தில் உள்ள குளுக்கோசினை சீரான சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாக அமையும் குதிரைவாலி அரிசி.
அடிக்கடி சளி, காய்ச்சலால் அவதிப்படுபவர்களுக்கும் குதிரைவாலி அரிசி வரப்பிரசாதம். இதனைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்ள உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கச் செய்கிறது.
செரிமானத்தின் போது ரத்தத்தில் இருந்து குளுக்கோஸ் அளவை மெதுவாக வெளியிடுவதற்கும் உதவுகிறது. இதய நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல உணவாகப் பயன்படுகிறது.