இளநீர் குடிப்பதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்குமா...?

திங்கள், 21 பிப்ரவரி 2022 (18:31 IST)
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது.


பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற கனிமங்கள் இளநீரில் அதிகம் இருப்பதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கும்.

முகத்தில் ஏற்படும் பருக்கள்,  புள்ளிகள், சுருக்கங்கள் மற்றும் படை போன்ற இடங்களில் இளநீரை இரவில் படுக்கும் போது தடவிவிட்டு காலையில் கழுவ வேண்டும். இதனை தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் செய்தால் சரும பிரச்சனைகள் சரியாகும்.

இளநீரில் சைட்டோகைனின்கள் இருப்பதால் முதுமை தோற்றத்தை தடுக்கவும் உதவுகிறது. மேலும் இதிலுள்ள செலினியம் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய்க்கு எதிராக போராடும்.

இளநீர் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறதாம். ஆனால் மற்ற பானங்களை விட இளநீர் பருகுவது உடம்புக்கு மிகவும் நல்லது என்பது உறுதி.

இளநீரில் கால்சியம், இரும்பு, மாங்கனீசு, மெக்னீசியம் மற்றும் ஜிங்க் போன்ற கனிமங்கள் உள்ளன. இந்த கனிமங்கள் ஆரஞ்சு போன்ற பழங்களை விட அதிகமாக உள்ளன. ஆகவே சருமம் அழகாக பொலிவுடன் இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்