உணவில் தேவைக்கு அதிகமான அளவில் உப்பு சேர்த்துக்கொண்டால், அசிடிட்டி, சிறுநீரகத்தில் கல் போன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பது உண்மை; அதேபோல, கிழங்குகளில் இருக்கும் கலோரிகள், வாய்வுத் தொல்லையை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால், சாப்பிடும் அளவைப் பொறுத்துதான் இந்தப் பிரச்னை உருவாகும். சரியான அல்லது குறைந்த அளவில் உட்கொண்டால், அசிடிட்டி, அது தொடர்பான நெஞ்செரிச்சல் என எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.