உணவு சாப்பிடும்போது ஒவ்வொரு உணவிற்கும் தகுந்தாற்போல் நொதி சுரக்கும். உணவிற்கும் பழத்திற்கும் சுரக்கும் நொதிகள் வேறு. உங்களுகு ஜீரணக் கோளாறுகள் இல்லையென்றால் இப்படி உணவும், பழங்களும் சேர்ந்து சாப்பிடலாம் தவறில்லை. ஆனால் ஜீரண மற்றும் கல்லீரல் பிரச்சனைகள் இருப்பவர்கள் அவ்வாறு சேர்ந்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
இதனால் அமிலத்தன்மை அதிகரிப்பு, நெஞ்செரிச்சல் போன்றவை உண்டாகும். ஜீரண பிரச்சனைகள் அதிகரிக்கும். ஆகவே அஜீரணக் கோளாறுகள் இருப்பவர்கள் மட்டும் உணவையும், பழங்களையும் சேர்த்து சாப்பிட வேண்டாம். மற்றவர்கள் தாராளமாக சாப்பிடலாம்.
ஆனால் எல்லாருக்கும் சொல்ல வேண்டிய அறிவுரை என்னவென்றால், பழங்களை எப்போதும் காலை அல்லது மாலை இடைவேளைகளில் தனியாக சாப்பிடுவதால் மெட்டபாலிசம் அதிகரிக்கும், அவற்றின் முழுச்சத்துக்கள் நமக்கு கிடைக்கும். நீர்ச்சத்தும் தக்க வைக்கப்படும். உணவுடன் சேர்த்து சாப்பிடுவதை விட, தனித்து சாப்பிடும்போது, அவற்றின் சத்துக்கள் இருமடங்கு அதிகரிக்கும்.