உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் பச்சை ஆப்பிள் !!

வெள்ளி, 24 ஜூன் 2022 (09:55 IST)
பச்சை ஆப்பிளில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளதால் கண்பார்வை திறனை அதிகரிக்க உதவுகிறது. பச்சை ஆப்பிள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.


பச்சை ஆப்பிளில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து உடலில் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும். எனவே உடலில் அதிக கொழுப்பு உள்ளவர்கள் பச்சை ஆப்பிளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பச்சை ஆப்பிளில் சர்க்கரை அளவு குறைவாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் இதனை சாப்பிடலாம். பச்சை ஆப்பிளை தோலுடன் சாப்பிடுவதுதான் நல்லது. பச்சை ஆப்பிளை காலை அல்லது மதியம் சாப்பிடுவது நல்லது.

பச்சை ஆப்பிளில் அதிக நார்ச்சத்து உள்ளதால் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும். வளர்சிதை மாற்றமும் துரிதமடையும். செரிமான அமைப்பு சீராக செயல்படும். எடையை குறைக்க பச்சை ஆப்பிள் சிறந்த உணவாக இருக்கிறது.

பச்சை ஆப்பிள் கல்லீரலுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடியவை. குடல் அமைப்பை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. குடல் இயக்கத்தையும் எளிதாக்குகிறது.

பச்சை ஆப்பிளை தினமும் சாப்பிட்டு வந்தால் நுரையீரல் தொடர்பான நோய்கள் 23 சதவீதம் குறைக்கும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஆஸ்துமா அபாயத்தையும் குறைக்கும். நோய்த்தொற்று காலத்தில் பச்சை ஆப்பிளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பச்சை ஆப்பிளில் உள்ள அதிகமான வைட்டமின்கள், சருமத்தை பராமரிக்க உதவுகிறது. பச்சை ஆப்பிளில் உள்ள வைட்டமின் சி சரும செல்களுக்கு எதிராக ஏற்படும் சேதத்தை தடுக்கும். இதனால் சரும புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகளை குறைக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்