அன்றாட உணவில் கிட்னி பீன்ஸை சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் !!

வெள்ளி, 24 ஜூன் 2022 (09:30 IST)
பீன்ஸ் வகைகள் பல உண்டு. கிட்னி பீன்ஸ் நம் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான முக்கியமான ஊட்டச்சத்துகளை கொண்டிருக்கிறது. அதிக செலவில்லாமல் குறைந்த செலவில் குறிப்பிடத்தக்க அளவு நார்ச்சத்து, ஃபோலெட், பாஸ்பரஸ், தாமிரம், புரதம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், மாலிப்டினம் மற்றும் வைட்டமின் B1, வைட்டமின் B சத்தை கொண்டிருக்கிறது.


உணவில் வழக்கமாக பீன்ஸ் உட்கொள்வது பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதிகப்படியான எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமன் ஆகியவை நாள்பட்ட நோய்களுக்கு ஒரு காரணம். கிட்னி பீன்ஸ் உண்மையில் உடல் எடையை சீராக்க உதவுகிறது.

கிட்னி பீன்ஸ் நார்ச்சத்து நிறைந்தது என்பது போன்றே இது எல்டிஎல் என்னும் கொழுப்பின் அளவை குறைக்கவும் செய்கிறது. இதனால் இதய நோய்கள் இதய கரோனரி அபாயம் குறைகிறது. உடலில் கொழுப்பின் அளவை ஆரோக்கியமாக சமநிலைப்படுத்த பெருந்தமனி, தடிப்புத்தோல் அழற்சி மற்றும் மாரடைப்பால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைகிறது.

வைட்டமின் C நிறைந்த காய்கறிகள், பழங்களில் இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி உண்டு. அதே போன்று ஒவ்வொரு கப் கிட்னி பீன்ஸிலும் தினசரி பரிந்துரைக்கப்பட்ட அளவில் 10% நோய் எதிர்ப்பு சக்தி குணங்கள் உள்ளது. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை தூண்டுகிறது. மேலும் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை ஊக்குவிக்க செய்கிறது. வெளியிலிருந்து உடலுக்குள் ஊடுருவ முயற்சிக்கும் நோய்க்கிருமிகளை எதிர்ப்பதோடு உடலில் கொலாஜன் உற்பத்தியிலும் பெரும் பங்கு வகிக்கிறது.

கிட்னி பீன்ஸில் இருக்கும் நார்ச்சத்துகள் நீரிழிவை நிர்வகிக்கவும் அதன் தீவிரத்தை குறைக்கவும் உதவும். இந்த உணவில் இருக்கும் அதிகப்படியான நார்ச்சத்துகள் உடலில் இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. குளுக்கோஸின் அதிகப்படியான ஆபத்துகளை குறைத்து ஆற்றல் அளவை மேம்படுத்தவும் உதவுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்