நம் உடலில் சுரக்கும் மூன்று திரவங்கள் செரிமானத்துக்கு முக்கியமானவை. எச்சில், செரிமான அமிலம், கல்லீரலில் சுரக்கும் நொதியான பைல். இந்த மூன்று திரவங்களின் சுரப்பையும் இஞ்சி ஊக்குவிக்கும். கடினமான உணவுகளை கூட எளிதில் ஜீரணமாக்கும் தன்மை கொண்டது.
இஞ்சியைத் தட்டி நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, தேன் கலந்து பருக செரிமான பிரச்சனைகள் அகலும். அதிலும் காலையில் பருகினால், உங்கள் செரிமான மண்டலம் சுத்தமாகி அதன் செயல்பாடு அதிகரிக்கும்.
சளி, இருமல், ஜலதோஷம் இருப்பவர்களுக்கு கைகண்ட மருந்து இஞ்சி. இது குளிர் காலத்தில் வெப்பம் தரும் உணவுகளில் ஒன்றாகும். ஒரு கப் இஞ்சி டீ அருந்தினால் அது உங்கள் உடல் நலத்தை சீராக வைத்திருக்கும்.