இஞ்சியை துவையலாக அரைத்து சாப்பிட்டு வர வாந்தி, பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் ஆகியவை ஏற்படாது. இஞ்சியில் இருக்கும் காரத்தன்மை மிகுந்த வேதிபொருள் கிருமிகளையும் அழிக்கும் திறன் கொண்டது.
சளி, இருமல், ஆஸ்துமா போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் தினமும் காலை,இரவு என இரண்டு வேளையும் இஞ்சி சாருடன் சிறிதளவு தேன் கலந்து குடித்து வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
இஞ்சியானது பசியைத் தூண்டுவதுடன், தேவையற்ற கழிவுகளை வெளிக்கொணர உதவுகிறது. உடலின் ஜீரண உறுப்புகள், சிறுகுடல், பெருங்குடல் உள்ளிட்டவை இஞ்சி சாறு மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது.