உடலின் வெப்பநிலையை சீராக்குமா மஞ்சள் பூசணி ஜூஸ் ?

புதன், 12 அக்டோபர் 2022 (09:34 IST)
மஞ்சள் பூசணிகாயை சமைத்து சாப்பிட்டு வந்தால் இதில் உள்ள பெக்டின் என்னும் வேதிபொருள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் உதவுகிறது.


சிறுநீரக கற்கள் மற்றும் பித்தப்பை பிரச்சனை உள்ளவர்கள் பூசணிக்காய் ஜூஸை தினமும் மூன்று வேளை அரை டம்ளர் அளவு தொடர்ந்து 10 நாட்கள் குடித்து வந்தால் இப்பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.

மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் மஞ்சள் பூசணி ஜூஸ் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். ஏனெனில் மஞ்சள் பூசணியில் உள்ள மலமிளக்கும் பண்புகள் மலச்சிக்கலிலிருந்து விடுபட உதவும்.

மஞ்சள் பூசணியில் வைட்டமின் சி மற்றும் இதர கனிமச்சத்துக்கள் வளமான அளவில் உள்ளன. எனவே தினமும் ஒரு டம்ளர் மஞ்சள் பூசணி ஜூஸை குடித்து வந்தால், நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடலை தாக்கும் பாக்டீரியா, வைரஸ் போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து, உடலைப் பாதுகாக்கும்.

தினமும் ஒரு டம்ளர் மஞ்சள் பூசணி ஜூஸை குடித்து வந்தால் உடலின் வெப்பநிலையை சீராக வைத்து கொள்ளும். செரிமான பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் தினமும் சிறிதளவு பூசணி ஜூஸைக் குடித்து வாந்தால், செரிமானம் சிறப்பாக நடைபெறுவதோடு, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியமும் மேம்படும்.

மஞ்சள் பூசணி ஜூஸ் குடித்து வந்தால், இதில் உள்ள வைட்டமின் சி, ஈ மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற சத்துக்கள் சரும பிரச்சனைகளை நீங்கி, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எனவே அழகாக சருமத்தை பெற விருப்பினால், மஞ்சள் பூசணி ஜூஸைக் குடிக்கலாம்.

Edited by Sasikala
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்