தொப்பையை குறைக்க உதவும் உணவுகளும் அதன் பயன்களும்...!

Webdunia
இஞ்சி சாற்றில் தேன் கலந்து இளம் சூட்டில் காலையில் வெறும் வயிற்றில் தினமும் குடித்து வந்தால் தொப்பை குறைந்து விடும்.
இஞ்சியை சாறு எடுத்து அவற்றில் அரைப் பகுதி எலுமிச்சை பழச்சாற்றை விட்டு அப்படியே வைத்திட வேண்டும். 5 நிமிடங்களி கழித்துப்  பார்த்தால் இஞ்சி சாற்றின் கலங்கிய பகுதி அடியில் தங்கிவிடும். பிறகு கலக்கமில்லாத அந்தச் சாற்றை வாரம் இரண்டு முறைப் பருகி வரத்  தொப்பை குறைவதைக் காணலாம்.
 
உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்குத் தண்ணீர் ஒன்றே எரிபொருளாக இருப்பதால் தண்ணீரின் தேவை அதிகமாகிறது. ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு லிட்டர் தண்ணீர் குடிப்பது உடல் வறட்சியைச் தவிர்ப்பதோடு உடலில் தங்கியிருக்கும் நச்சுப்பொருட்களை வெளியேற்றி உடல்  எடை குறைப்பிற்கு முக்கிய காரணியாக விளங்குகிறது. 
 
ஆப்பிள் பழத்தில் உள்ள உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள் என்பவை உடலில் உள்ள கெட்டக் கொழுப்பினைக் கரைப்பதில் மிக முக்கியப் பங்கு  வகிக்கிறது.
 
தினமும் காலையிலோ அல்லது மதியமோ சிறுதானியங்களில் ஏதாவது ஒன்றை உண்டு வந்தால் அவற்றில் உள்ள நார்ச்சத்து கொழுப்பைக் குறைத்து தொப்பை வளர்வதைத் தடுக்கும். முக்கியமாகக் குதிரைவாலி மற்றும் கேழ்வரகு போன்றவை பசி ஏற்படுவதைக் கட்டுபடுத்தி மிக  அதிகமான உணவு உட்செல்வதைத் தடுக்கிறது.
 
இஞ்சியில் அதிகளவு உயிர்வளியேற்ற எதிர்ப்பொருள் இருப்பதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைத்துத் தொப்பை  குறைவிற்கு வழிவகுக்கிறது.
 
அனைத்து வகையான மீன்களிலும் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலங்கள் அடங்கியுள்ளன. இவை வயிற்றில் கெட்ட கொழுப்புகள் படிவதைத்  தவிர்ப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
 
இந்தச் செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட சர்க்கரைகள் மற்றும் வேதியல் கலவைகள் கலக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட வெள்ளைச் சர்க்கரைகள் இவையிரண்டையும் உணவில் சேர்க்கும்போது நமது உடலின் சர்க்கரை அளவு மிகவும் அதிகரிப்பதோடு தேவையற்ற நச்சுக்கள் உடலில்  கலந்து நமது செரிமான உறுப்புகளைச் செதமாக்கி உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகிக்கிறது.
 
வெள்ளைச் சர்க்கரைக்குப் பதிலாக இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட நாட்டுச் சர்க்கரை, தேன், அதிமதுரச் சாறு மற்றும் பனங்கற்கண்டு போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்