கெட்ட கொழுப்பை கரைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும் ஆளி விதை !!

Webdunia
ஆளி விதையில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து வெளியேற்றவும் உதவி செய்யும். இதனால் உடல் எடை வேகமாக குறையும்.


ஆளி விதையில் ஒமேகா-3 எனப்படும் நல்ல கொழுப்பு அமிலங்கள் மிக அதிக அளவில் நிறைந்திருக்கின்றது.
 
ஆளி விதையில் இரண்டு வகையான நார்ச்சத்துக்களும் உள்ளன. இது வயிறு நிரம்பிய உணர்வைக் கொடுக்கும். எனவே அடிக்கடி பசி எடுப்பது தடுக்கப்படும்.
 
இதயத்தில் அடைப்பை உண்டாக்க கூடிய கெட்ட கொழுப்பை கரைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். மற்றும் இதயத்தை வலுவாக்கவும் உதவுகின்றது.
 
ஆளிவிதையில் அதிகளவு இருக்கும் ஒமேகா-3 மற்றும் ஆன்டிஆக்ஸின் உடலில் புற்றுநோயை உண்டாகும் காரணிகளை அழிப்பதுடன் புற்றுநோய் வராமலும் தடுக்கும். பெண்களுக்கு உண்டாகும் மார்பக புற்று நோய் வராமல் தடுக்கும் ஆற்றல் இந்த ஆளி விதைக்கு உண்டு என ஆய்வுகள் கூறுகின்றன.
 
நீண்ட நாட்கள் சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் தினசரி ஆளி விதையினை உணவில் எடுத்து வருவது மிகவும் நல்லது. இது இன்சுலின் சுரப்பை சீராக்கி இரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருப்பதற்கும் உதவி செய்கின்றது.
 
ஆளி விதையில் உள்ள சத்துக்கள் எலும்புகளில் உண்டாகும் தேய்மானத்தை தடுக்கும். குறிப்பாக மூட்டுகளில் உண்டாகும் வறட்சியை தடுத்து மூட்டுகளுக்கு நல்ல பலம் கொடுக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்