தினமும் திராட்சைப் பழம் சாப்பிட்டு வர குடல்புண்ணை சரிசெய்யும்!

Webdunia
ஊட்டச் சத்து மிக்க பழங்களில் திராட்சையும் ஒன்று, இதில் வைட்டமின் பி1, பி2, பி3, பி6, பி12, சி, இரும்புச் சத்து பாஸ்பரஸ்  போன்ற சத்துப் பொருள்கள் உண்டு.

 
உடல் வறட்சி, மூளை நரம்புகள் வலுபெறுவதுடன் செரிமான கோளாறுகள் நீங்கும். இதயம் பலவீனமாக இருந்தாலும், அடிக்கடி  படபடப்பு ஏற்பட்டாலும், திராட்சை பழத்தை பன்னீரில் ஊறவைத்து சிறிது நேரம் கழித்து அதை அப்படியே பிசைந்து வடிகட்டி  சிறிது சிறிதாக குடித்து வர இதயம் பலப்படும். படபடப்பு நீங்கும்.
 
உலர்ந்த திராட்சைப் பழத்தை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வர மலச்சிக்கல் தீருவதுடன் நாவறட்சி மற்றும் மயக்கமும்  நீங்கும். திராட்சையால் குடல்புண் ஆறும். கல்லீரல் மண்ணீரல் கோளாறு நீங்கும். நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
 
உலர்ந்த திராட்சைப் பழங்களை இரண்டாக பிளந்து எடுத்து, சுத்தமான நீரில் சிறிது நெல்லிக்காய் சாறு கலந்து சாப்பிட்டு வர,  சிறிநீரகக் கோளாறுகள் குணமாகும்.
 
திராட்சைப் பழத்துடன் மிளகை அரைத்து சாப்பிட்டு வர கல்லடைப்பு நீங்கும். கருப்பு திராட்சை பழச்சாறு 200 மி.லி. தினமும்  இரண்டு வேளை அருந்தி வர, அதிகபடியான கொழுப்புச் சத்து குறையும்.
 
திராட்சை நல்ல உறக்கத்தை தருவதுடன், ரத்த சோகையை போக்கும் தன்மை உடையது. பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய்  கோளாறுகளை நிவர்த்தி செய்வதுடன் காக்காய் வலிப்பு நோய் உள்ளவர்கள் தினமும் திராட்சைப் பழம் சாப்பிட்டு வர அந்த  நோயின் தன்மை குறையும்.
அடுத்த கட்டுரையில்