மணலிக்கீரையை சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனை தீருமா...?

மணலிக்கீரையை காயவைத்து பின்பு பொடியாக்கி, தினமும் காலை, மாலை 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் மன உளைச்சல், மன அழுத்தம், மனநலக் கோளாறுகள் குணமாகும்.

மணலிக்கீரையை மசியல் செய்து சாப்பிட்டால் ஞாபக மறதி கோளாறுகள் ஏற்படாது. மணலிக் கீரை சாறில் உலர்ந்த திராட்சையைச் சேர்த்து அரைத்துச் சாப்பிட்டு வந்தால் வறட்டு இருமல் குணமாகும்.
 
மணலிக்கீரையை பாசிபருப்புடன் சேர்த்து கூட்டு தயார் செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும். மணலிக் கீரையுடன், மிளகு சேர்த்துக் கஷாயமாக்கிச் சாப்பிட்டு வந்தால் மூக்கில் இருந்து நீர் கொட்டுதல் சரியாகும்.
 
மணலிக்கீரையின் வேர், இலைகளை நீர் விட்டு அரைத்து பின்பு அதில் சிறிதளவு எடுத்து நீரில் கலக்கி அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்தால் குடலில் உள்ள தட்டைப்புழுக்கள் குறையும்.
 
மணலிக் கீரை, துளசி, வில்வம் இவை மூன்றையும் சம அளவு எடுத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் இரவு 2 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் தூக்கமின்மை ஏற்படாது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்