தினமும் காலையில் இந்த பானங்களை குடிப்பதால் தொப்பை குறையுமா...?

Webdunia
உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் எடையைக் குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒன்றில் பாதி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை தேக்கரண்டி தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.

உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் உணவில் தாராளமாக வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளலாம். ஏனென்றால் வெங்காயத்தில் கொழுப்புச் சத்து குறைவு. வெதுவெதுப்பான வெந்நீரில் தேன் கலந்து அருந்தினால் உடல் பருமன் குறையும்.
 
கொட்டை நீக்கிய நெல்லிக்காயை சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்.
பாலில் இஞ்சி சாறு கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.
 
சிறிது சீரகத்தை மஞ்சள் வாழைப் பழத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
 
தேனுடன் ஆமணக்கு வேரை இடித்து கலந்து ஒரு டம்ளர் தண்ணீரில் இரவில் ஊறவைத்து காலையில் அதனை வடிகட்டி குடித்து வர தேவையற்ற ஊளைச் சதை  குறையும்.
 
அருகம்புல்லை சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும். இரண்டு தேக்கரண்டி முருங்கை இலைச் சாற்றை தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
 
கொள்ளுப் பயிரை எடுத்து அதை நன்றாக சுத்தம் செய்து அதை ரசம் வைத்து கல் உப்பு கலந்து தினமும் மூன்று வேளை குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்