அடிக்கடி மைதா உணவுகளை உண்பதை தவிர்க்கவேண்டும் ஏன் தெரியுமா...?

மைதா என்பது கோதுமையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஒரு வகை உணவு பொருள் ஆகும். இதில் சுத்தமாக நார்ச்சத்து இல்லை. மேலும் இதனை இரசாயன பொருட்கள் பயன்படுத்தி வெண்மையாகவும் மற்றும் சுத்தமாகவும் மாற்றுகின்றனர்.

மைதா வகை உணவுகளில் அதிக அளவு கிளைசெமிக் இன்டெஸ் கொண்டது. இதனை நீங்கள் அதிக அளவில் எடுத்துக்கொள்ளும்போது உங்களின் இரத்த சர்க்கரையின் அளவு மிக வேகமாக அதிகரிக்கும். மேலும் இது உங்களுக்கு நீரிழிவு நோயினை ஏற்படுத்தும் முக்கிய காரணியாக அமையும்.
 
மைதா வகை உணவுகளை அதிகம் எடுத்து வந்தால் உங்கள் உடலில் கொழுப்பு அதிகரிக்கும். மேலும் இது உடல் பருமன், இருதய கோளாறு, இரத்த அழுத்தம் போன்ற உடல் உபாதைகளை கொண்டு வரும். 
 
மைதாவில், கோதுமையில் உள்ள அளவுக்கு நார்ச்சத்து இல்லை . எனவே இதனை உண்டு வந்தால் உங்களுக்கு மலசிக்கல் பிரச்சினை உண்டாகும்.  எனவே அடிக்கடி மைதா உணவுகளை உண்டு வருவதை தவிர்க்கவும்.
 
மைதா உணவுகளை அதிகம் உண்டு வந்தால் செரிமான கோளாறு போன்ற பிரச்சினை ஏற்படும். மைதா உணவுகளை அதிகம் உண்டு வந்தால் உங்கள் இரத்த நாளங்களில் அதிக அளவு கொழுப்பு படியும் . முக்கியமாக இருதய இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து இருதய கோளாறு, இரத்த குழாய் அடைப்பு, போன்ற பலவித பிரச்சினைகள் ஏற்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்